வங்கதேசத்தில் பள்ளி பாடபுத்தகங்களில் நாட்டின் தந்தையாக கருதப்பட்டு வந்த ஷேக் முஜ்பர் ரகுமானின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரத்தை அறிவித்தவர் ஜியாவூர் ரகுமான் எனவும் மாற்றியமைக்கப்பட்டது.வங்கதேசத்தை சுதந்திர நாடு என பிரகடனம் செய்தவர் முஜ்பர் ரகுமான் தான் என்றும், அப்போது ராணுவ கமாண்டராக இருந்த ஜியாவூர் ரகுமான் அந்த உத்தரவை வாசிக்க மட்டுமே செய்ததாகவும் அவாமி லீக் தெரிவித்துள்ளது.