நேபாள நாட்டில், போராட்டத்திற்கு மத்தியில் இளைஞர்களின் செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோம் நகரம் பற்றி எரியும்போது, நீரோ மன்னன், பிடில் வாசித்து கொண்டிருந்தார் என்று, ஒரு சொலவடை பேசப்படுவதுண்டு. வயலின், புல்லாங்குழல்-ன்னு சொல்லக்கூடிய ஏதோ ஒரு இசைக்கருவியை நீரோ மன்னர் வாசித்தார் என்பது, காலங்காலமாக சொல்லி வருவதாகும்.. இதே போலத்தான், கொதித்தெழுந்த ”ஜென் இசட்” தலைமுறையினர் என்கிற ஆவேசமான டைட்டிலோட நேபாளம் பற்றி எரிகிறது. அசாதாரண சூழலில் அந்த குட்டி நாட்டின் பிரதமரே ராஜினாமா செய்திட்டு போயிட்டாருன்னு ’அப்டேட்’ வந்த நிலையில், சில சுவாரஸ்யமான ’அட்ராசிட்டி’ வீடியோக்களும் வைரலாகி வருகிறது. முதலாவதாக, ஒரு இளைஞர் ஆடின ஆட்டம், சக்கை போடு போடுகிறது. பற்றி எரியும் தீப்பிழம்புகளை செல்ஃபி எடுத்த அந்த இளைஞர் நளினமாக டான்ஸ் ஆடியது அழகோ அழகு. இதை எல்லோரும் செஃல்பி எடுக்க தவறவில்லை. ஒருவேளை செல்ஃபி செலிபிரிட்டியா இருப்பாரோ... டான்ஸ் மாஸ்டராக கூட இருக்கலாம். அடுத்ததாக, பற்றி எரியும் கட்டிடம், போலீஸ் ஜீப் என்று ஒன்றை கூட விடவில்லை. செல்ஃபி எடுத்து தள்ளிட்டாங்க. இன்னும் ஒரு வருஷத்துக்கு மேல இந்த செல்ஃபி தான் வைரலே. இதிலும் ஒரு சிலர் ’ஷேப்டி’ ஆக தான் வந்திருந்தனர். தலைக்கவசத்தோட, அதான் ஹெல்மெட்டோட வந்து செல்ஃபி எடுத்து சந்தோஷப்பட்டிருக்காங்க... இந்த களேபரத்துக்கு மத்தியில், அங்கிருந்த ஒரு வீல்சேரை, ஒருத்தரு, சாவகாசமா நண்பரோட உதவி உடன் தனது டூவிலரில் கட்டி எடுத்து சென்றார். ஆங்காங்கே ஆவேசமா பேட்டி கொடுத்திட்டு இருக்கும்போது ஒரு டிரோன் பறந்து வந்தது. இந்த இளைஞர்கள் போட்ட கூச்சலில், டிரோன் கூட பதறிட்டு பறந்து போன மாதிரி இருந்தது. மாளிகை தீப்பற்றி, திரும்பிய பக்கமெல்லாம் புகை மண்டலமாக இருந்த போதும் கூட, அங்கிருந்த புல்வெளியில் முகாமிட்ட இளைஞர்கள் சிலர், சாவகாசமா உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆக இருந்தனர். போராட்டக்களம் என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, உலகிற்கே வழி காட்டிட்டாங்க நேபாளத்து நாட்டுக்காரங்க என்றே சொல்லலாம். திரண்டு வந்த இளைஞர்களை பார்த்து போலீசார் வணக்கம் வைக்க, பதிலுக்கு ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டமும் வணக்கம் வைத்தது. ஒரு இளைஞர் வணக்கம் மட்டும் இல்லை என்று, காலில் விழப்போக, பயந்து ஒரு போலீஸ்காரர், ஆளை விடுங்கப்பா சாமின்னு, அவரும் காலில் விழவந்தார். கல்வீச்சு... பதிலுக்கு கண்ணீர்புகை குண்டு, களேபரம், கலவரம் என்று பலரும் கலங்கி நிற்க, பல இடங்களில் கலகலப்பாக இருந்தது. ஹெல்மெட் பாதுகாப்போட வந்த இளைஞர்கள், அங்கிருந்த பொருட்களை சூறையாடவும் தயங்கவில்லை. கையோடு கிடைத்ததை அள்ளிச்சென்றனர். கலவரம் ஓய்ந்து, குட்டி நாடானா நேபாளத்தில் அமைதி நிலவட்டும், இந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதார உயர்வுன்னு நல்லது நடக்கட்டும். நாமும் பிரார்த்திப்போம்...இதையும் பாருங்கள்; நேபாள போராட்டக்களத்தில் "அட்ராசிட்டி"- கொதித்தெழுந்த இளைஞர்கள் "ரிலாக்ஸ் மூவ்மென்ட்" | Nepal News