சோசலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால், உ.பி.முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ், தமது வீட்டுக்கு வெளியே வாகனத்தில் வைக்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயண் சிலைக்கு மாலை அணிவித்தார்.ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினத்தில் லக்னோவில் உள்ள JP International Centreல் அஞ்சலி செலுத்த முயன்ற அகிலேஷ் யாதவை தடுக்கும் விதமாக அவரது வீட்டருகே போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்தனர். பாஜக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அகிலேஷ் அழைப்பு விடுத்தார்.