நடப்பு கல்வியாண்டில் பள்ளி வேலைநாட்களை 210 நாட்களாக குறைத்துள்ள பள்ளிக்கல்வித்துறை இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.வழக்கமாக ஒரு கல்வியாண்டில் 210 நாட்களாக இருக்கும் பள்ளி வேலை நாட்கள், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில், வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.இதனை ஏற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை நடப்பு கல்வியாண்டிலும் பள்ளி வேலை நாட்களை 210 நாட்களாக மாற்றி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதனால் இனி பெரும்பாலும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.