ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதன் ஒட்டுமொத்த தோற்றமும் ஐபோன் 16 மாடலை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சீனாவில் ரெட்மி டர்போ 4 பிரான்டிங்கில் வெளியாகும் நிலையில், சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் போக்கோ X7 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.