ரெட்மி 14சி 5ஜி ஸ்மாட்ர்போன் வரும் ஜனவரி 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயங்கும் இந்த போனில் 50எம்பி ப்ரைமரி கேமரா, 5160mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 3 நிறங்களில் கிடைக்கும் இந்த போனின் ஆரம்ப விலை 15 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.