சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாற்றாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.