மாலை 7 மணிக்குப் பிறகோ, காலை 7 மணிக்கு முன்னரோ வாடிக்கையாளர்களை எதற்காகவும் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற விதியை மீறியதற்காக HDFC வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில், வங்கிகள் நியமித்துள்ள கலெக்ஷன் ஏஜென்டுகள், வங்கி முதலீட்டுக்கான வட்டி விகிதம், மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறியதால், வங்கி நெறிமுறைகள் சட்டம் 1949 வது பிரிவின் கீழ் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்னர் HDFC வங்கியில் சட்டபூர்வ சோதனை மற்றும் மதிப்பீடுகளை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடத்தி அதன் அடிப்படையில் ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டு , அதன் பின்னர் இந்த அபராதம் விதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.