மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர். மும்பை வோர்லி பகுதியில் துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம் செய்யப்பட்டது.