ராஷ்மிகா நடிப்பில் வெளியான "சாவா" திரைப்படம், 33 நாட்களில் உலகளவில் 760 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான திரைப்படம் சாவா. 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், 760 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.