மைனரான மனைவியின் ஒப்புதலுடன் பாலியல் உறவு வைத்தாலும், அது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் என வழக்கு ஒன்றில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருமண வயதை எட்டும் முன்னரே தமக்கு திருமணம் நடைபெற்றதாகவும் அதை தொடர்ந்து கணவர் தம்மை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாகவும் கூறி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு விசாரணை நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை விசாரித்த து. கணவன் மனைவியாக இருந்தாலும், மனைவிக்கு 18 வயதிற்கு அதிகமாக இருந்தால் மட்டுமே ஒப்புதலுடன் கூடிய பாலுறவுக்கு சட்டத்தில் அனுமதி உள்ளதாக தீர்ப்பளித்த நீதிபதி, 18 வயதிற்கு குறைவான பெண் பாலியல் உறவுக்கு ஆளாக்கப்பட்டால் அது பாலியல் பலாத்காரமே என்று கூறி உயர் நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டுகள் தண்டனையை உறுதி செய்தார்.