சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் ரொமாண்டிக்காக பேசக்கூடிய மற்றொரு காணொலியை லீக் செய்திருக்கிறார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா. இரு தினங்களுக்கு முன், ஜாய் கிரிசில்டா ஒன்றை சொல்ல, அதை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாய் பகிர்ந்திருக்கும் வீடியோ, புயல் வேகத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது...ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகளுக்கு தந்தையான சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்துகொண்டு, தற்போது கைவிட்டுவிட்டதாக பிரபல ஆடை வடிவமவைப்பாளர் ஜாய் கிரிசில்டா தொடர்ந்து புகார் கூறி வந்தார். மாதம்பட்டியின் குழந்தை தான் தன் வயிற்றில் வளர்வதாகவும் ஜாய் சொல்லி வந்த நிலையில், மாதம்பட்டியுடன் திருமணம் ஆனது போன்ற ஃபோட்டோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பரபரப்பை கிளப்பினார். தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருந்த பல வீடியோக்கள், ஃபோட்டோக்களை அவ்வப்போது பகிர்ந்தும் வருகிறார். இருவரும் காதல் வயப்பட்டது முதல் குழந்தை வரை மாதம்பட்டி ரங்கராஜ் உடன் நாட்களைக் கழித்ததாகவும், யூடியூப் சேனல்களுக்கும் ஜாய் அவ்வப்போது பேட்டியும் அளித்து வந்தார். இந்நிலையில், மகளிர் ஆணையம் வரை இவர்களின் விவகாரம் குறித்து முக்கிய விசாரணைக்காக அக்டோபர் 31ஆம் தேதி ஆஜராகும்படி இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அன்றைக்கு ஜாய்க்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த இரு தினங்களில், ஜாய் ஒரு போஸ்ட்டை ஷேர் செய்தார். “நீதி வெல்லும்” என பகிர்ந்திருந்த ஜாய், அண்மையில் நடந்த மகளிர் ஆணைய விசாரணைக்கு ஆஜரான, என்னுடைய சோ கால்டு ஹஸ்பண்ட் மாதம்பட்டி ரங்கராஜ், என் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்தார் என்றும், குழந்தை தன்னுடையது தான் என்ற உண்மையை ஒப்புக்கொண்டார் என்றும் கேப்ஷனில் தெரிவித்திருந்தார். இந்த செய்தி வேகமாக பரவ, அதற்கு மறுப்பு தெரிவித்து ரங்கராஜ் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். அதில், ஜாயை தன்னிச்சையாக திருமணம் செய்துகொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை எனவும், தன்னை மிரட்டி ஜாய் திருமணம் செய்து கொண்டதாகவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜாய் மற்றொரு வீடியோவை லீக் செய்திருக்கிறார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மிகுந்த உற்சாகத்துடன் ரொமாண்டிக்காக பேசியது போல் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா மிஸ்டர் ஹஸ்பண்ட் ரங்கராஜ்?மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க, இதுல லவ்வா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? என்றும் ஜாய் அந்த வீடியோவுக்கு கேப்ஷனிட்டுள்ளார். ஏற்கெனவே மாதம்பட்டி பேசிய இதே போன்றதொரு வீடியோவை சில நாட்களுக்கு முன் ஜாய் வெளியிட்ட நிலையில், அதை விமர்சித்தும், ரீல்ஸ் கண்டெண்ட்டாக மாற்றியும் பலர் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில், ரங்கராஜின் புதிய வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதையும் பாருங்கள் - DNA Test-க்கு வர சொல்லுங்க, ஆதாரத்தோடு ஜாய் சொன்ன விஷயம் | Joy Crizildaa | Madhampatty