தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமநவமி பெருவிழாவின் 4ம் நாள் உற்சவர் ராமபிரான் தங்ககருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்ற ராமபிரானை வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.