ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நவராத்திரி திருவிழாவில் சிறுவர்கள் கத்திபோட்டு ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். நவராத்திரி திருவிழாவை ஒட்டி, ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெற்றது. இந்த சூழலில், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலாவுடன், தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கத்தி போடுதல் நிகழ்ச்சியில், சிறுவர்களும் ஆண்களும் கத்தி போட்டு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.