மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுவதாக ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மனு தள்ளுபடி ஆனது. பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றார். பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக தலைவர் அன்புமணி, நிறுவனர் ராமதாஸ் இடடையே மோதல் நடந்து வரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரி, கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டது. கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது எனவும் மனுவில் கூறப்பட்டது. வழக்கை வாபஸ் பெற அனுமதி, தள்ளுபடிகட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடராக தனக்கு தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இதே கோரிக்கையுடன் உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். Related Link மார்ச் 1 பிறந்தநாள் - முதல்வர் வேண்டுகோள்