பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை என்பதால் தினமும் அறிக்கை கொடுப்பார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக பதிலளித்தார். சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகளுக்காக விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்த பின் எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ள பள்ளி கட்டடத்தில் மாண்டிசோரி மழலையர் வகுப்புகளை பார்வையிட்டார். முன்னதாக காரில் வந்து இறங்கிய முதலமைச்சர், அங்கு வரவேற்க கூடியிருந்த பெண்ணின் குழந்தையை தூக்கி கொஞ்சியதுடன் பொதுமக்களுக்கு கை கொடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதானி விவகாரத்தில் துறையின் அமைச்சரே பதிலளித்துள்ளதாகவும், அதை டிவிஸ்ட் செய்ய வேண்டாம் என கூறினார். மேலும் அதானி விவகாரம் குறித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் முதல்வர் தெரிவித்தார்.