ஆந்திராவில் வயல் வெளியில் சர்வ சாதாரணமாக உலாவிய ராஜநாகத்தால் விவசாயிகள் அச்சமடைந்தனர். அனக்காப்பள்ளி மாவட்டம் தேவரபள்ளி கிராமத்தில் உள்ள வயல்வெளியில் 16 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று உலாவுவதைக் கண்டு, நாய்கள் குரைத்துள்ளன. இதைப் பார்த்த விவசாயிகள், ஓடிச் சென்று பார்த்தபோது, ராஜநாகம் படம் எடுத்தபடி சீறிக் கொண்டிருந்தது. விவசாயிகள் அருகில் சென்றபோது அவர்களை பார்த்தும் சீறிய ராஜநாகம், பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. எனினும், ராஜநாகம் மீண்டும் கிராம பகுதிக்குள் வருமோ என்கிற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவி வருகிறது.