தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த ராஜநாகம், பொது மக்களை பீதி அடைய வைத்துள்ளது. தமிழக - கேரள எல்லைப் பகுதியான, தென்காசி அருகே, கேரள மாநிலம், தென்மலை பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் பெரிய அளவிலான ராஜ நாகம் புகுந்தது. இதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த அந்த வீட்டில் இருந்தவர்கள், அச்சத்தில் வீட்டிலிருந்து வெளியேறி, சம்பவம் தொடர்பாக கேரள வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், விரைந்து வந்த கேரள வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் பதுங்கி இருந்த ராஜநாகத்தை லாவகமாக மீட்டு, அடர் வனப்பகுதிக்குள் விட்டனர். வீட்டிற்குள் ராஜநாகம் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் வசித்து வரும் பொது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.