நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸாபிசில் சாதனை படைத்தது. இதனிடையே ஜெயிலர் படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ள இயக்குனர் நெல்சன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 'ஜெயிலர் 2' படம் தொடர்பான புரோமோ வீடியோவை வெளியிட்டார். இந்நிலையில், ரஜினியின் ஜப்பான் ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தை பார்க்கச் செல்வதை உற்சாகத்துடன் ஃபோட்டோக்கள் மூலம் பகிர்ந்துவருகின்றனர்.