சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் அறிந்து, உடனடியாக பெங்களூரு புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரர் சத்ய நாராயண ராவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம், ரஜினி கேட்டறிந்தார். ரஜினியின் சகோதரரான சத்ய நாராயண ராவ், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த், தனது சகோதரரை காண மருத்துவமனைக்கு விரைந்தார். பெங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தான் ரஜினியின் சகோதரரான சத்ய நாராயண ராவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து தற்போது எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இல்லை.தற்போது, மருத்துவமனையில் ரஜினியின் சகோதரரான சத்ய நாராயண ராவிற்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என, ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பட விழாக்களில், அவரின் சகோதரரான சத்யநாராயண ராவ் கலந்துகொண்டு இருக்கின்றார். ரஜினிகாந்தின் வாழ்க்கையில் அவரின் அண்ணனின் முக்கியத்துவத்தை பற்றி பலமுறை பேசியிருக்கிறார். ரசிகர்களுக்கும் அவரை பற்றி நன்கு தெரியும். விரைவில் அவர் குணமடைந்து ரஜினிக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் ரஜினி ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது. இதையும் பாருங்கள் - Rajinikanth Brother Heart Attack | ரஜினியின் சகோதரருக்கு மாரடைப்பு, ஓடோடி வந்த ரஜினி