கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பிற்கான வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், 173ஆவது திரைப்படத்தை முதல் முறையாக கமலின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பிற்கான வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டு 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கும் படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது