உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினியை மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த 30-ம் தேதி மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிக்கு, இதய நோய் சிகிச்சை நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.