லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தை, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு நிறைவடைந்தது.