சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் ரஜினி, கமல் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.