ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அரசு மருத்துவமனைக்குள் நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். அஜ்மீர் நகரில் காலை முதலே கனமழை பெய்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியது. இந்நிலையில் ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்தது.