வெளுத்து வாங்கிய கனமழையால் உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா பகுதியில் உள்ள சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீரில் கார் சிக்கி கொண்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது. சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கிய நிலையில், அதில் சிக்கிக் கொண்ட பேருந்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது.