அமெரிக்காவில், காஷ்மீர் பிரிவினைவாதத்தை ஆதரிப்பவரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற எம்பியுமான இல்ஹான் ஒமரை (( Ilhan Omar)), மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததை பாஜக கண்டித்துள்ளது. தீவிர இந்திய எதிர்ப்பாளரான இந்த எம்பியை சந்திக்க பாகிஸ்தான் தலைவர்களே தயங்கும் நிலையில் அவரை ராகுல் சந்தித்திருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு எதிராக மாறி விட்டதாக பாஜகவின் IT பிரிவு தலைவர் அமித் மாளவியா எக்ஸ் பக்கத்தில் குற்றஞ்சாட்டி உள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள ஜனநாயக கட்சி எம்பியான இல்ஹான் ஒமர் அமெரிக்காவின் மின்னசொட்டாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானவர். சோமாலியாவை சேர்ந்த அவர், அங்கு உள்நாட்டு போர் வெடித்ததும் குடும்பத்துடன் தப்பி கென்யா அகதிகள் முகாமில் தங்கிய பிறகு 1995ல் அமெரிக்காவுக்கு வந்து குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.