டெல்லி மாசுபாடு, ஊழல், பணவீக்கம் குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி காங்கிரசை காப்பாற்ற போராடுவதாகவும், தனது போராட்டம் நாட்டை காப்பாற்றுவதற்கானது எனவும் பதிலடி கொடுத்துள்ளார். சீலாம்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ராகுல், ஊழலை ஒழிப்பதாக கூறிய கெஜ்ரிவால் ஆட்சியில் ஊழல் நடப்பதாக சாடினார்.