டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், ஒரு வாக்காளர், ஒரு வாக்கு என்ற அடிப்படை கொள்கைக்கு ஆதரவாக மக்கள் திரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.