அமெரிக்காவில் தலையில் கொம்புகள் கொண்ட முயல்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தலை மற்றும் முகங்களில் இருந்து கொம்பு போன்ற பாகங்களை கொண்ட காட்டு முயல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை Shope papilloma என்ற வைரஸால் ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால் முயல்களில் மருக்கள் போன்ற கட்டிகள் உருவாகி கொம்புகளாக காட்சி அளிக்கும்.