ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து திருமாவளவன் பொதுவெளியில் தான் பேசியுள்ளதாகவும், திமுகவிடம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அக்கட்சியின் செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீட் ஷேர் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை, 'ஆட்சியில் பங்கு என்ற திருமாவளவன் கருத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார் என்றும், சீட் ஷேர் குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.