குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி வீராங்கனை மரியா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். லண்டனில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் அனிசிமோவா மற்றும் ஜெர்மனியின் தத்ஜனா மரியா பலப்பரீட்சை நடத்தினர். இதில் சிறப்பாக ஆடிய மரியா 6க்கு 3, 6க்கு 4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.