காலாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் குடும்பத்துடன் மக்கள் குவிந்தனர்.நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து, கண்ணுக்கு இதமாக பசுமை நிறைந்து காணப்பட்ட தேயிலை தோட்டங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.மேலும் ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.