அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம், 500 கோடி ரூபாய் கடந்து வசூல் குவித்துள்ளது. இப்படம் வெளியான 2 நாட்களில் 449 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த நிலையில், படம் வெளியான 3 நாட்களில் 500 கோடி ரூபாயை கடந்து வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்திய சினிமாவிலேயே குறைந்த நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.