புஷ்பா படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பு முடிந்தது வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின் 2 ஆம் பாகம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா சோகமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். ற்போது, படத்தின் இரண்டாம் பாதி டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், படப்பிடிப்பு முடிந்தது வருத்தமாக இருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.