கோலாகல கொண்டாட்டத்தோடு வெளியான புஷ்பா 2...அல்லு அர்ஜுன் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகப்பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகள்ல உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கு புஷ்பா 2 திரைப்படம் . சுகுமார் இயக்கத்தில உருவான இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் முன்னணி நடிகர்கள் நடிச்சிருக்காங்க.இந்த நிலையில படத்தின் முதல்நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சூப்பரான விமர்சனங்களை கொடுத்திருந்தாங்க. தமிழகத்துல புஷ்பா 2 காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில புஷ்ப ராஜ் அறிமுக காட்சி, லேடி கெட்டப் முதல் ஆக்ஷன் காட்சிகள் வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் உலகம் முழுவதிலும் இப்படம் டிக்கெட் முன்பதிவில் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ருக்கு.இந்தியா முழுவதும் 'புஷ்பா 2' படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில முதல் நாளில் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுது.நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய த்ரிஷாதமிழ் சினிமால வயசானாலும் அழகு கொஞ்சம் கூட அழகு குறையாத நடிகைன்னு திரிஷாவ கண்ண மூடிகிட்டு சொல்லலாம்.. ஒரு இடைவெளிக்கு பிறகு 96, பொன்னியின் செல்வன், லியோ படங்கள் மூலமா ரசிகர்கள கவர்ந்து சமீபத்துல வெளியான கோட் படத்தின் மட்ட பாடல் வரைக்கும் ஆதிக்கத்த கொஞ்சமும் கொறைக்காம செலுத்திட்டு வர்றாங்க.. இந்த நிலையில 2024-ல கோலிவுட் சினிமாவுல சத்தமே இல்லாம ஒரு சம்பவத்த த்ரிஷா பண்ணியிருக்காங்க.. தொடர்ந்து அஜித்தோட இவங்க நடித்துள்ள விடாமுயற்சி, குட் பேட் அக்லி மற்றும் மணிரத்னம் இயக்கத்துல உருவாகிவரும் தக் லைப்-னு நெறைய படங்கள் அடுத்தடுத்து இவங்க நடிப்புல வெளியாக இருக்கும் நிலையில, நயன்தாராவை விட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையா த்ரிஷா மாறியிருக்காங்க..நயன்தாராவுக்கு ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்படுறதா சொல்லப்படும் நிலையில, தக் லைஃப் படத்திற்காக த்ரிஷாவுக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்காம். இதன் மூலம் 2024-ல அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியல்ல த்ரிஷா முதலிடத்துல உள்ளதா தகவல் வெளியாகியிருக்கு.நடிகர்னா அவர் தான் - ஊர்வசி பாராட்டுதமிழ், மலையாள சினிமா ரசிகர்களால அதிகம் விரும்பப்படும் நடிகையா இருப்பவர் ஊர்வசி.. தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு தன்னோட நடிப்பின் மூலம் உயிர் கொடுத்து வேற ஒரு தளத்துக்கு கொண்டு போகும் அளவுக்கு நடிப்பு ராட்சசின்னே அவங்கள சொல்லலாம்..அப்பேற்பட்ட நடிப்பு ராட்சசியான ஊர்வசி மற்றொரு சூப்பர் நடிகரான ஃபகத் ஃபாசில தன்னோட நேர்காணல் ஒன்னுல புகழ்ந்து தள்ளியிருக்காங்க.. இதுதொடர்பா சமீபத்துல அவங்க கொடுத்த ஒரு இண்டர்வீவ்ல, “இன்னைக்கு இருக்கக்கூடிய நடிகர்கள், நட்சத்திர அந்தஸ்தை பெறணும்னும் ஏராளமான ரசிகர்களை ஈர்க்கணும்னே முயற்சி பண்றாங்க.. . ஆனா பகத் பாசில் மட்டும்தான் வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்திருக்காரு.. ஏன்னா, அவர் தன்ன நடிகர்-னு மட்டுமே வரையறுக்க விரும்புறாரு.. அதன்படி பார்த்தா அவர் மட்டும்தான் நடிகர் என்ற பாதையில மாறாமலும் விலகாமலும் இருக்காரு. இதனால், நடிகர்-னு தன்ன சொல்லிக்குற தைரியம் அவருக்கு மட்டுமே இருக்கு”ன்னு பயங்கரமா புகழ்ந்துருக்காங்க.. ஒரு நடிப்பு ராட்சசியே ஃபகத் ஃபாசில் நடிப்ப இப்படி பாராட்டுறாங்களேன்னு சினிமா ரசிகர்கள் பயங்கர ஆச்சர்யத்துல வாயப்பொளந்துருக்காங்க..வைரலாகும் எமி ஜாக்சன் புகைப்படங்கள்ஆர்யா நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இந்தப்படத்தை தொடர்ந்து ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி, 2. 0 உள்பட பல படங்களில நடித்து ரசிகர்கள் மத்தியில பிரபலமாகியிருந்தாங்க.இதைத்தொடர்ந்து எமி ஜாக்சனுக்கும் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் என்கிற தொழிலதிபருக்கும் திருமணம் ஆன நிலையில ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்த எமி தற்போது பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து திருமணம் செய்துகிட்டாங்க.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன் சமீபத்துல விருது நிகழ்ச்சியில புதிய ஹேர் ஸ்டைலுடன் கலந்து கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது இணையதளத்துல வைரலாக்கி வருகின்றனர்.ஒரே நாளில் 2 திருமணம் செய்யப்போகும் பிரபலம்நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்கிற ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு பதிலளிக்கும் விதமா , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் தனது திருமணத் தகவலை உறுதுபடுத்தியிருந்தாங்க. கோவாவில் கீர்த்தி சுரேஷ்க்கும் அவரது நீண்ட நாள் காதலருமான ஆண்டனி தட்டிலுக்கும் டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கு.இந்த நிலையில கீர்த்தி சுரேஷின் திருமணம் மாப்பிள்ளைக்காக கிறிஸ்தவ முறைப்படி மட்டுமே நடக்க இருப்பதா கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் இரண்டு மதத்தின் அடிப்படையில இரண்டு முறை திருமணம் செஞ்சிக்க போறதா தகவல் வெளியாகியிருக்கு.அதாவது டிசம்பர் 12ம் தேதி காலை இந்து முறைப்படியும், அன்று மாலை தேவாலயத்தில் வைத்து கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கு.கார்ஜியஸ் லுக்கில் மீனாட்சி சவுத்ரி...விஜயின் GOAT, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில பிரபலமான நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள திக்குமுக்காட வச்சிருக்கு.. சிவப்பு நிறத்துல வித்தியாசமான ஸ்டைல்ல புடவை கட்டி மீனாட்சி சவுத்ரி விதவிதமா போஸ் கொடுத்திருப்பது ரசிகர்கள வச்ச கண்ணு வாங்க அவங்கள ரசிக்க வச்சிருக்கு..அவங்களோட ஸ்டில்ஸ்க்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிஞ்சி வைரலாக்கி வர்றாங்க..மனமுடைந்த சமந்தாவின் மோட்டிவேஷனல் ஸ்டோரிதெலுங்கு நடிகரும் நாகர்ஜூனாவின் மகனுமான நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்த நிலையில திடீரென விவாகரத்து பெற்று இருவரும் பிரிஞ்சிருந்தாங்க. தற்போது தனது மறுமணத்துக்கு ரெடியான நாக சைதன்யா அவரது தோழியான சோபிதா துலிபாலாவை நேற்று ஹைதராபாத்தில் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில திருமணம் செஞ்சிகிட்டாரு.இவர்களது திருமணத்துல கலந்துகொண்ட பிரபலங்கள் பலரும் மணமக்களை வாழ்த்தி வரும் நிலையில முன்னாள் கணவரின் திருமணத்தால மனமுடைந்த நடிகை சமந்தா ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் Wrestling போட்டியில சண்டையிட்டுக்கொள்ளும் படியா, fight like a girl என குறிப்பிட்டு இன்ஸ்டா ஸ்டோரியில் மோட்டிவேஷனல் வீடியோ ஒன்றை பதிவிட்டிருப்பது வைரலாகியுள்ளது.