அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வெளியான 14 நாட்களிலேயே உலகளவில் ஆயிரத்து 500 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளது. இந்த படம் தற்போது 1508 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ள நிலையில், பாகுபலி 2 படத்தின் மொத்த வசூலான 1800 கோடி ரூபாய் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.