திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பௌர்ணமி கருடசேவை கோலாகலமாக நடைபெற்றது. பௌர்ணமி தினத்தையொட்டி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மாடவீதிகளில் வீதிஉலா நடைபெற்றது.