டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 150 சிக்சர் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரன் படைத்துள்ளார்.அந்நாட்டில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரில் நிகோலஸ் பூரன், 43 பந்தில் 7 சிக்ஸர்கள் உட்பட 94 ரன்கள் அடித்தார்.அதன் படி டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 150 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.