கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு யுஸ்வேந்திர சாஹலை கட்டியணைத்து அந்த அணியின் உரிமையாளர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாழ்த்து கூறினார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் 31ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் மோதின.கொல்கத்தாவுக்கெதிரான ஆட்டத்தில் வெறும் 111 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதற்கு பஞ்சாப் பவுலர்களின் அசாத்திய பந்துவீச்சே காரணம். குறிப்பாக 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாஹால் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.