பஞ்சாப் விவசாயிகள் சண்டிகரை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பஞ்சாப் விவசாயிகள் இன்று சண்டிகரை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும் ஒரு வாரம் போராட்டம் நடத்த வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.