ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஆறாவது வெற்றியை பதிவு செய்திருக்கும் பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை அணி இழந்தது.