மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு பஞ்சாபின் லூதியானா கிரிமினல் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது 10 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக நடந்து வந்த வழக்கில் பலமுறை நடிகர் சோனு சூட்டுக்கு சம்மன் அனுப்பினாலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் பிடி வாரண்ட் பிறப்பித்து லூதியானா நீதித் துறை நடுவத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தாம் போலியான ரிஜிகா காயின்என்ற திட்டத்தில் மோசடி செய்யப்பட்டதாகவும் அதில் நடிகர் சோனு சூட்டுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான விசாரணையில் சோனு சூட் ஆஜராகாததை அடுத்து அவரை கைது செய்து வரும் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மும்பை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.