பாரிசில் தாம் மருத்துவமனையில் இருந்த போது அங்கு வந்த இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் PT உஷா, தமது அனுமதி இன்றி புகைப்படம் எடுத்து அதை அரசியலுக்கு பயன்படுத்தியதாக நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றஞ்சாட்டி உள்ளார்.உடல் எடை 100 கிராம் அதிகரித்ததால் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும், பதக்கத்தையும் இழந்த அவர், தற்போது அரியானாவில் காங்கிரஸ் வேட்பாளராக சட்டமன்றத்திற்கு போட்டியிடுகிறார். இந்த நிலையில் அரியானா உள்ளூர் டிவிக்கு அளித்த பேட்டியில், பாரிசில் PT உஷாவால் தமக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். அந்த புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததன் மூலம் PT உஷா தனக்கு எந்த உதவியை செய்தார் எனவும் வினேஷ் போகத் கேள்வி எழுப்பினார்.