மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டல்லாஸ் நகரில் டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது பேசிய அவர், நாம் பேசுவதை விட பிறர் பேசுவதை கவனமுடன் கேட்பது மிகவும் முக்கியம் எனவும், மக்களை புரிந்து கொள்வதற்கு அவர்கள் கூறுவதை கவனித்து கேட்பதே அடிப்படை என்றும் தெரிவித்தார்.அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் எழுப்ப வேண்டியதில்லை, ஆனால் அடிப்படையான பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது அவசியம் எனக் கூறிய அவர், எதற்காக போராடுகிறோம் என்பதை மிகவும் கவனமுடன் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.