பொலிவியாவில் பொருளாதார மந்த நிலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும் - போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. La Paz நகரில் Ponchos Rojos என்ற பொலிவியன் சமூக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், போராட்டத்தின் போது, போலீசார் அமைத்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறினர். இதனால் போலீசாருடன் மோதல் ஏற்பட்ட நிலையில், காவலர் ஒருவரை போராட்டக்காரர்கள் சூழ்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், ரப்பர் தோட்டாக்கள் கொண்டும் சுட்டனர். இந்த மோதலில் ஏழு போலீசார் மற்றும் இரண்டு போராட்டக்காரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.