சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், டெல்லியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து லடாக்கின் லே பகுதியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. லடாக்கிற்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக நேற்றிரவு டெல்லியில் சிங்கு எல்லையில் இருந்து காந்தி சமாதி நோக்கி பேரணி சென்றபோது சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதைக் கண்டித்து லடாக்கின் லே பகுதியில் கார்கில் ஜனநாயகக் கூட்டணி மற்றும் அபெக்ஸ் பாடி லே ஆகிய கட்சிகள் "பந்த்"-திற்கு அழைப்பு விடுத்திருந்தன.