பீகார் தலைநகர் பாட்னாவில் மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் 13ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகள் நடந்தேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இத்தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக்கோரி, தேர்வர்கள் காந்தி திடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.