சென்னையில் மீண்டும் சொத்து வரி உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சொத்து வரியா? மக்களின் சொத்தை பறிக்க வரியா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு என விமர்சித்துள்ளார்.வீட்டுக்கு வெள்ளையடிக்கக் கூட வழியின்றி தவிக்கும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் அரசின் கொடுமையால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெயக்குமார், சொத்து வரி உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை உயரும் எனவும், இதனால் மாணவர்கள், இளைஞர்கள், வேலை தேடுபவர்கள் என பாமர மக்கள் அனைவரும் பாதிப்படையும் நிலை ஏற்படும் எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.