இந்திய கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேலுக்கு கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய தளபதியாக இருந்த டோனி மைக்கேல், இனிமேல் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்ட கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்ட கடலோர காவல்படை தளபதியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.